Pooja Krishna H. A., II Year B. A. English

தென்றலே வீசாதே
எங்கள் நட்பை கொண்டுச் செல்லாதே
வார்த்தையே பேசாதே
எங்கள் நட்பை விடைபெறச் சொல்லாதே.

அலையே பாயாதே
எங்கள் நட்பை இழுத்துச் செல்லாதே
கதிரவனே காயாதே
எங்கள் நட்பை வாட்டச் செய்யாதே.

மடலே வரையாதே
எங்கள் நட்பிற்கு முற்றுப்புள்ளி வைக்காதே
கண்ணீரே கறையாதே
எங்கள் நட்பு என்றும் முடியாதே…

Advertisements